icon

Winner K. Devika

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தான தானன தானன தானன தானனா 

தான தானன தானன தானன தானனா


தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா  


தான தானன தானன தானன தானனா 

தான தானன தானன தானன தானனா


தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா


K. Devika எழுதிய வரிகள்:

பூமிப் பூப்பந்து ஆர்ப்பரித் தாடிடும் நாளிலே
கீதம் ஆனந்தக் கூத்திடும் ஆசையின் நாவிலே

கானகம் நமக்கென இருந்தது தவம்தான்
வானகம் தொடர்மழை பொழிந்தது வரம்தான்
மாமலை ரசித்தது நதிமகள் நடம்தான்
கேளுங்கள் இயற்கையின் அதிசய சுரம்தான்

பூமிப் பூப்பந்து ஆர்ப்பரித் தாடிடும் நாளிலே
கீதம் ஆனந்தக் கூத்திடும் ஆசையின் நாவிலே

காலையில் உதிப்பது கதிர்முகச் சிவப்போ
சோலையில் உதிர்ப்பது மலர்க்கொடிச் சிரிப்போ
தேன்கனி கொடுத்தது அருஞ்சுவை விருந்தோ
தேவைக்குப் பறந்தது மனம் எனும் பருந்தோ

பூமிப் பூப்பந்து ஆர்ப்பரித் தாடிடும் நாளிலே
கீதம் ஆனந்தக் கூத்திடும் ஆசையின் நாவிலே



வெற்றியாளர் K. Devika என்ன கூறுகிறார்

ஒரு சரணம் அணிக்கு என் பணிவான வணக்கம்

அற்புதம் என்கிற தலைப்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசுக்கு தேர்வுபெற்றது மிக்க மகிழ்ச்சி அளித்தது. 

தமிழ் மீதும் கவிதை எழுதுவதிலும் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக முகநூலிலும் தன்ப்பட்ட முறையிலும் கவிதைகள் எழுதிவந்தேன். 

நண்பர்களின் பதிவு வாயிலாக ஒரு சரணம் வலைத்தளம் குறித்து தெரிந்து கொண்டேன். இங்கு பல வித கவிதைகள் பாடல்கள் இன்னும் ஒரு சரணம் என பல போட்டிகள் நடந்து வருவது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். 

மிகுந்த ஆர்வத்துடன் அப்போட்டிகளில் பங்குபெற்றேன். பரிசும் வென்றேன். நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சரணம் குழுவின் இத்தகைய போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய நல்ல முயற்சியானது வளரும் கவிஞர்களுக்கும் வாழும் தமிழுக்கும் ஆற்றுகிற மிகப் பெரிய தொண்டாகக் காண்கிறேன். 

இக்குழுவின் இத்தகைய அரிய செயற்பாடுகள் தமிழ் வலைத்தள உலகில் முதல் முயற்சியாகும்.

தொடர்ந்து ஏற்றமும் வளர்ச்சியும் கண்டு இவ்வலைத்தளம் பற்பல கவிஞர்களையும் வளமான  கவிதைகளையும் தமிழுக்கு அணிகலன்களாய் தர வேணுமாய் எல்லாம் வல்ல இறைவன் பொற்பாதம் வேண்டி 

பாராட்டுகிறேன்! வணங்கிறேன் ! வாழ்த்துகிறேன் ! 

நன்றி !!