icon

Winner நீரோன்

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனனநன்ன தனனநன்ன நா
தனனநன்ன தனனநன்ன நா


தானனநன்னா தன தானனநன்னா 

தானனநன்னா தன தானனநன்னா

தானனநன்னா தன தானனநன்னா

தானனநன்னா தன தானனநன்னா


தனனநன்ன தனனநன்ன நா
தனனநன்ன தனனநன்ன நா


தானனநன்னா தன தானனநன்னா 

தானனநன்னா தன தானனநன்னா

தானனநன்னா தன தானனநன்னா

தானனநன்னா தன தானனநன்னா








நீரோன் எழுதிய வரிகள்:

கண்ணிமையில் கசியும்கடல் நீர்
கன்னி மயில் வரும்வரையில் தான்..

மான்விழி கண்ணால் எனை மாய்த்திட வந்தாள்...
மீள்வழி இல்லா பெரும் மாயையை தந்தாள்...
வாய் மொழி சொல்லால் எனை வாழ்ந்திட வைத்தாள்...
வான்வெளி எல்லாம் பல வானவில் தைத்தாள்....

கண்ணிமையில் கசியும் கடல் நீர்
கன்னி மயில் வரும்வரையில் தான்...

கார்முகில் இல்லா புது மாமழை உண்டோ....
காரிருள் வெல்லா ஒரு சூரியன் உண்டோ...
காற்றது செல்லா புவி பாதையும் உண்டோ...
காணவே செய்தாள் அவள் காதலில் எல்லாம்....



வெற்றியாளர் நீரோன் என்ன கூறுகிறார்

என் கவிதை/ பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்ற ஒருசரணம்.காம் தளத்திற்கு நன்றி.


சிறு வயதில் செவி வழி நுழைந்த தமிழ்ப் பாடல்களை, உண்டு களித்த என் மூளையில் முலைவிட்டன சிறு சிறு கவிதை சிறகுகள்...

உயரம் தொடாமல் உள்ளம் சுற்றிய அச்சிறுகவிதைகள், "நீயும் கவிதான்" என்று பொய் உரைத்துப் பல கவிதைகளைஎழுதிக்கொண்டது...

நீண்ட காலமாகத் தனிப்பட்ட பல காகிதங்களில் கவிதைகளாக கரைந்தொழுகியது என் எழுதுகோல்...


ஏனோ? அடுத்தடுத்த கவிதைகளுக்கான இடைவெளி கூடியது... 

அடுத்த வரிகளுக்காகக் காத்திருந்து காணாமல் போன வரிகள் பல…

முடிவில் பணமோ பாராட்டோ பெற்றுத் தராத செயல்களை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை… நானும் சமூகத்தின் அங்கமாகி எழுதமறந்தேன்...


முகப்புத்தகதில் வந்த விளம்பரம் ஒன்று என்னை புது தளத்திற்கு அழைத்துச்சென்றது… அந்த தளம், என் அப்புத்தகத்தைப் புரட்டியது, புது கவிதைகளை அகழ்ந்தது... தொடர்ந்து எழுத புது ஊக்கம் அளித்தது.

அந்த தளம் ஒருசரணம்.காம் என்னும் வானம்... என் சிறகுகள் இப்போது வளர்கின்றன..


மீண்டும் நன்றி...