icon

Winner நீரோன்

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனன தனநன்ன  நன்னன்  

தனன தனநன்ன  நன்னன்

 

தனன நாநன்ன நானா  

தனன நாநன்ன நானா

தனன நாநன்ன நானா

தானன நாநன்ன நானா

 

தனன தனநன்ன  நன்னன்  

தனன தனநன்ன  நன்னன்

 

தனன நாநன்ன நானா  

தனன நாநன்ன நானா

தனன நாநன்ன நானா

தானன நாநன்ன நானா

 

நீரோன் எழுதிய வரிகள்:

தனிமை தவழ்ந்திடும் இரவில்
இனிமை பொழிந்திடும் நிலவே

நெஞ்சம் தீண்டுகின்ற தீயாய்
நினைவில் நீந்துவது நீயா
கனவில் காதலித்த பூவே
காலையில் காயங்கள் ஏனோ?

பரிதி படர்ந்திருக்கும் பகலில்
பனியில் நனைந்திருக்கும் இமையே

மனதை காணுமிரு விழியோ
மௌனம் பேசுமொரு மொழியோ
பருவம் மீட்டிவிட்ட இசையோ
பாரம் கூட்டியது யாரோ?



வெற்றியாளர் நீரோன் என்ன கூறுகிறார்

என் கவிதை/ பாடலை அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்ற ஒருசரணம்.காம் தளத்திற்கு நன்றி.


சிறு வயதில் செவி வழி நுழைந்த தமிழ்ப் பாடல்களை, உண்டு களித்த என் மூளையில் முலைவிட்டன சிறு சிறு கவிதை சிறகுகள்...

உயரம் தொடாமல் உள்ளம் சுற்றிய அச்சிறுகவிதைகள், "நீயும் கவிதான்" என்று பொய் உரைத்துப் பல கவிதைகளைஎழுதிக்கொண்டது...

நீண்ட காலமாகத் தனிப்பட்ட பல காகிதங்களில் கவிதைகளாக கரைந்தொழுகியது என் எழுதுகோல்...


ஏனோ? அடுத்தடுத்த கவிதைகளுக்கான இடைவெளி கூடியது... 

அடுத்த வரிகளுக்காகக் காத்திருந்து காணாமல் போன வரிகள் பல…

முடிவில் பணமோ பாராட்டோ பெற்றுத் தராத செயல்களை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை… நானும் சமூகத்தின் அங்கமாகி எழுதமறந்தேன்...


முகப்புத்தகதில் வந்த விளம்பரம் ஒன்று என்னை புது தளத்திற்கு அழைத்துச்சென்றது… அந்த தளம், என் அப்புத்தகத்தைப் புரட்டியது, புது கவிதைகளை அகழ்ந்தது... தொடர்ந்து எழுத புது ஊக்கம் அளித்தது.

அந்த தளம் ஒருசரணம்.காம் என்னும் வானம்... என் சிறகுகள் இப்போது வளர்கின்றன..


மீண்டும் நன்றி...