icon

Winner K Sivakumar

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
K Sivakumar எழுதிய வரிகள்:

தாயின் பரிவு

அன்னையின் பரிவு அளவிட முடியாதது...
விண்ணளவு என்றாலும் அது போதாதது.. 

பாலூட்டி சீராட்டி தாலாட்டி வளர்க்குமிது..
பரிவூட்டி பண்பூட்டி பாராட்டி உயர்த்துமிது.
சோறூட்டி பசியாற்றி மகிழ்வூட்டி களிக்குமிது.
சுமையேற்றி துயிலோட்டி உடல்வாட்டி உழைக்குமிது
( அன்னையின்)

கண்ணிமையாய் காத்திடும் அன்னையின் கருணையிது.
கண்ணுறக்கம் பாராத பெண்மையின் பெருமையிது..
தன்னலம் பார்க்காத தாய்மையின் பண்பிது.
தன்னுயிர் சேயினுக்காய் உழைக்கின்ற அன்பிது.
(அன்னையின்)



வெற்றியாளர் K Sivakumar என்ன கூறுகிறார்

அன்புள்ள ஐயா. 

என்னுடைய கவிதையை பரிசுக் கவிதையாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி கவுரவித்ததற்கு மிக்க நன்றி. 

சிறு வயது முதல் கண்ணதாசன் பாடல்களை விரும்பிக் கேட்பேன். 
பாடலின் எளிமையும் கருத்தாழமிக்கச் சொற்களும் என்னை வாலிப வயதில் மிகவும் ஈர்த்தன. 
அவ்வப்போது சிறு குறு கவிதைகள் எழுதி பாராட்டுக்கள் பெற்றுள்ளேன்.  

அன்று ஒருநாள் யதேச்சையாக வலைத்தளங்களில் கவிதைப் போட்டி பற்றி தேடும் போது தங்களின்  ஒரு சரணம். காம் வலைதளம் கண்ணில் பட்டது. என்னுடைய பாடல் எழுதும் பசிக்கு தீனி போடும் விதமான சுவையான கவிதைப் போட்டிகள் கண்டு இன்புற்றேன். 'அடடா, இதுநாள்  தெரியாமல் போச்சே' என்று எண்ணத் தோன்றியது. 

ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பரிசும் பெற்றேன்.மகிழ்ச்சி.
தொடர்ந்து பாடல் எழுதி மேலும் பல பரிசுகளைப் பெறுவேன் என நம்புகின்றேன். 

தங்களின் இந்த அரிய சேவை பல கவிஞர்களை  ஊக்குவித்து வெளியுலகற்கு அறிமுகப்படுத்தும் 
தளமாக அமைந்திருக்கிறது  கண்டு மிகவும் மகிழ்ச்சி. 

பணி தொடரட்டும்! 
பரிசு மழை பொழியட்டும்

நன்றி. 
கோ. சிவகுமார்