icon

Winner S. Siva Subramaniam

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா
எளிதில் வந்து அருள்பவனே மால் மருகா

திக்கெட்டும் புகழ் மணக்கும் தெய்வம் நீயே
எனைத்தேடி வந்துந்தன் அருள் தந்தாயே
வாடி நின்ற போதெல்லாம் மன வடிவம் தந்து
மயக்கத்தில் இருந்தென்னை மீட்பார் உண்டோ 

உன்போலே 

மீட்பார் உண்டோ
சண்முகா!!


உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா
எளிதில் வந்து அருள்பவனே மால் மருகா

சிற்றின்ப சிக்கலில் இருந்து விடுவித்தென்னை
சிந்தை எல்லாம் சரவண பவமாக்கி சீர் தான் கூட்டி
அத்தனையும் ஆனந்தம் ஆக்கிக் காட்டும்
அழகு தெய்வம் அகண்ட இந்தப்பாரில் உண்டோ 

உன் போலே 

பாரில் உண்டோ
குமரா!!


உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா
எளிதில் வந்து அருள்பவனே மால் மருகா

S. Siva Subramaniam எழுதிய வரிகள்:

சிக்கலிலே அம்மையிடம் வேல் வாங்கியே
செந்தூரில் சூரனை ஆட்கொண்டாயே
நாடிவந்த பகதர்களை நலம்பெறவே செய்தாய்
நின்திருநீறுக்கு ஈடுஇணை உலகினில்
....... உண்டோ
இந்த பார்
உலகினில் உண்டோ
கந்தா!