icon

Winner Elamaran s

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே

என் காதலிப் பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்வதென்று புரியலே


விதவிதமாய்த் துணிக இருக்கு

விலையைக் கேட்டா நடுக்கம் வருது

வகைவகையா நகைகள் இருக்கு

மடியைப் பார்த்தா மயக்கம் வருது

எதைஎதையோ வாங்கணுமின்னு - அண்ணே

எதைஎதையோ வாங்கணுமின்னு

எண்ணமிருக்கு வழியில்லே - அதை

எண்ணாமிலிருக்கவும் முடியல்லே


கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே

என் காதலிப் பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்வதென்று புரியலே


கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்

பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்

ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்

உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்

என்னைப் போலே பலரையும் படைச்சு - அண்ணே

என்னைப் போலே பலரையும் படைச்சு

இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்

ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?


கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே

என் காதலிப் பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்வதென்று புரியலே


(மேலே கொடுக்கப்பட்டுள்ள அருமையான பல்லவியுடன் தொடங்கும் நகைச்சுவையும் வேதனையும் கலந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல் பகுதிக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள். )

Elamaran s எழுதிய வரிகள்:

நாளுக்கு நாளொரு கட்சியை வச்சான்
ஓட்டுக்கு நூறு நோட்டையும் திணிச்சான்..
சாதிய சொல்லி சகலமும் அடஞ்சான்..
நான் சாமானியனென சண்டைக்கும் இழுத்தான்..
வீதிக்கு வீதி கள்ளுக்கடைய திறந்து - அண்ணே
வீதிக்கு வீதி கள்ளுக்கடைய திறந்து
அவன் கொடுத்த நோட்டையும் பறிச்சுகிட்டான்..
அட முட்டாளேனு சொல்லி சிரிச்சிகிட்டான்..