Winner கலைப்பித்தன்
- வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்கு தடி வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே (என்னருமைக்)
(மேலே உள்ள சரணம் போல் பத்து(ஐந்து ஈரடி) அடி சரணம் ஒன்று அடிக்கு நான்கு சீருக்கு குறையாமல் எழுதி உள்ளிட்டு போட்டியில் கலந்துகொள்ளுங்கள். இந்தப் பாடல் தன் காதலையும் காதலியையும் பொருளாக வைத்து வெண்ணிலாவை விளித்துப் பாடிய பாடல் என்பதை அறிந்துகொள்க.)
கலைப்பித்தன் எழுதிய வரிகள்:
கார்முகிலில் முகம் மறைப்பாள் வெண்ணிலாவே
போர்புரியும் வீரமெல்லாம் வெண்ணிலாவே -இவள்
பேரழகில் வீழ்ந்ததென்ன வெண்ணிலாவே
கோடிகளில் புள்ளி வைத்தாய் வெண்ணிலாவே - அதில்
கோலமிட மறந்தாயோ வெண்ணிலாவே
வாடிப்போன மலராக வெண்ணிலாவே - என்
வனிதை முகம் மாறலாமோ வெண்ணிலாவே
அந்த
தேவதையே சேர்த்து வைக்க வெண்ணிலாவே - நல்ல
தோழியாக தூதுபோஎன் வெண்ணிலாவே