icon

Winner ராம்கிஷன்

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா
எளிதில் வந்து அருள்பவனே மால் மருகா

திக்கெட்டும் புகழ் மணக்கும் தெய்வம் நீயே
எனைத்தேடி வந்துந்தன் அருள் தந்தாயே
வாடி நின்ற போதெல்லாம் மன வடிவம் தந்து
மயக்கத்தில் இருந்தென்னை மீட்பார் உண்டோ 

உன்போலே 

மீட்பார் உண்டோ
சண்முகா!!


உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா
எளிதில் வந்து அருள்பவனே மால் மருகா

சிற்றின்ப சிக்கலில் இருந்து விடுவித்தென்னை
சிந்தை எல்லாம் சரவண பவமாக்கி சீர் தான் கூட்டி
அத்தனையும் ஆனந்தம் ஆக்கிக் காட்டும்
அழகு தெய்வம் அகண்ட இந்தப்பாரில் உண்டோ 

உன் போலே 

பாரில் உண்டோ
குமரா!!


உனை எண்ண எண்ண ஆனந்தமே முருகா
எளிதில் வந்து அருள்பவனே மால் மருகா

ராம்கிஷன் எழுதிய வரிகள்:

பிரணவம் தனை சிவன் தனக்கே போதித்த போதும்
பிரம்மன் அதை மறந்ததால் சிறை வைத்த வேலா
சரணமே முருகா என அடி சார்ந்தவர்க்கு
சகலமும் அளித்தருளும் வள்ளல் உண்டோ
உன் போலே
வள்ளல் உண்டோ
கந்தா!!



வெற்றியாளர் ராம்கிஷன் என்ன கூறுகிறார்

என்னை வெற்றியாளனாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எனக்குப் பள்ளி காலத்திலிருந்தே தமிழ் மேல் ஒரு ஆர்வம், கடந்த 12 வருடங்களாக நான் கவிதை எழுதுகிறேன்


ஆனால் அவை எல்லாம் எனக்குப் பிறகு படிப்பது என் அலமாரி மட்டுமே , நான் எழுதிய கவிதையை வெளியிடுவதற்கு ஒரு தளம் அமையாமல் இருந்தது, அந்த குறையைப் போக்கச் சரியான பாதை ஏற்படுத்தித் தந்துள்ளது orusaranam.com. அதிலும் குறிப்பாகச் சந்தத்திற்குப் பாடல் எழுதும் வகையில் அமைந்திருப்பது எழுதும் திறனை இன்னும் அதிகப்படுத்துகிறது


இந்த வெற்றி என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது


என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு அருமையான வாய்ப்பு இந்த orusaranam.com தளம்


நன்றி