icon

Winner Muruga Nantham.A

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே  – நீ

இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே


கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே  – உன்னைக்

காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே  – உன்

காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு

கள்ளியிடம் இருக்கு தடி வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ

கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே

அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே  – இது

அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே (என்னருமைக்)


(மேலே உள்ள சரணம் போல் பத்து(ஐந்து ஈரடி) அடி சரணம் ஒன்று அடிக்கு நான்கு சீருக்கு குறையாமல் எழுதி உள்ளிட்டு போட்டியில் கலந்துகொள்ளுங்கள். இந்தப் பாடல் தன் காதலையும் காதலியையும் பொருளாக வைத்து வெண்ணிலாவை விளித்துப் பாடிய பாடல் என்பதை அறிந்துகொள்க.



Muruga Nantham.A எழுதிய வரிகள்:

பல்லவி

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே

சரணம் 2

பொன்னிறத்தில் பூத்திருக்கும்
வெண்ணிலாவே - அவள்
புன்னகைதான் உன் பிறையோ
வெண்ணிலாவே ?

என்மடலை எடுத்துச் சென்று
வெண்ணிலாவே - இங்கே
என்னவளை அழைத்து வாராய்
வெண்ணிலாவே !

கண்ணுறக்கம் திருடிச்சென்று
வெண்ணிலாவே -அவள்
கண்மறைவில் மறைத்துவிட்டாள்
வெண்ணிலாவே !

காத்திருக்க நேரமில்லை
வெண்ணிலாவே - என்
காதலிக்கு எடுத்துச் சொல்லு
வெண்ணிலாவே !

வார்த்திருக்கும் வரிகளெல்லாம்
வெண்ணிலாவே - வெறும்
வார்த்தையல்ல வலிகளடி
என் நிலாவே !

(என்னருமைக் காதலிக்கு...

ஆ.முருகானந்தம்
அலைபேசி : 8838824765



வெற்றியாளர் Muruga Nantham.A என்ன கூறுகிறார்

ஒரு சரணம் குழுவினர்களுக்கு

எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மானும் ஆட
மயிலும் ஆட
மேடை ஏறி
குயிலும் பாட...

காணும் ஒரு
களத்திற் காக
காத்துக் கிடந்து
கவிஞன் வாட...

வேணும் சிறு
வாய்ப்பு என்று
காலம் நீண்டு
முதுமைக் கூட...

வீணும் இந்த
வாழ்வும் என்று
நாளும் எண்ணி
நானும் தேட...

கவிஞர்களுக் காக
ஒரு சரணம்
கவிதைகள் பாட
உடன் வரணும்...

என்றொரு வாய்ப்பும்
இணையத்தில் வந்து
வென்றவர் கையில்
பொற்கிழித் தந்து...

ஊக்கம் தந்திங்கு
உதவியவர் வாழ்க !
நோக்கம் சிறந்திங்கு
ஒரு சரணம் வாழ்க !

- ஆ.முருகானந்தம்
தமிழ்மண் கலைக்கூடம்
சிற்பம் சித்திரம் கவிதை
திருச்சிராப்பள்ளி