icon

Winner வாகீசன்

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே 

நில்லென்று கூறி நிறுத்தி வைத்துப் போனீரே


கடல் தாண்டிப் போய் காசு பணம் சம்பாதித்து வந்து கட்டு வைத்து வீடு கட்டி களித்திருப்போம் என்றீரே

சிமைக்குச் சென்று சீக்கிரமே வருகிறேன் என்று ஓர்மைக்கு ஓர் குழந்தை உ(க)ருவாக்கித் தந்தீரே

முத்தத்திலும் மோகத்திலும் மூடி வைத்த பாசத்தைப் பச்சை உடம்பை பேணுவதில் பரப்பி வைத்துப் பொழிந்தீரே

கூடப்பிறந்தவர்கள் எல்லோரும் கார் நிறம் தான் வாழ வந்தவள் நீ மட்டும் வைகறை சிவப்பெனச் சொன்னீரே


சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே 

நில்லென்று கூறி நிறுத்தி வைத்துப் போனீரே


(இந்த ஒப்பாரிப் பாடலுக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்)


வாகீசன் எழுதிய வரிகள்:

ஆசைகளும் கனவுகளும் அடுக்கடுக்காய் நிறைவேற காசு பணம் சேர்த்து வாரேன் கலங்காதே என்றீரே
எல்லாரும் மெச்சும்படி நாமும் வாழ்ந்திடலாமென்றே என் விழியுதிர்க்கும் கண்ணீரை விரலாலே துடைத்தீரே
அக்கறையும் அரவணைப்பும் அன்புமொழி வார்த்தைகளும் எக்கரையில் இருந்தாலும் என்னிடத்தில் சேர்த்தீரே
தனிமையில் நானிருந்து தவிக்கின்ற நிலை கண்டு இனிமேலும் இந்நிலைமை தொடராது என்றீரே