icon

Winner ச. லெட்சுமிதா

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தான தானன தானன தானன தானனா 

தான தானன தானன தானன தானனா


தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா  


தான தானன தானன தானன தானனா 

தான தானன தானன தானன தானனா


தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா

தானன தனத்தன தனத்தன தனன்நா


ச. லெட்சுமிதா எழுதிய வரிகள்:

அற்புத பிரபஞ்சம்
-----------------

நீல வானிலே ஓவியம் தீட்டிய தாரடா
சோலைப் பூவினுள் தேன்ரசம் ஊற்றிய
தாரடா

காணுத லனைத்திலும் புதைந்துள்ள
பரமே!
ஓதுதற் கரியன, பிரம்மனின் வரமே!
மானுட மனத்திலும் மறைத்துளப்
பொருளே!
யாதென புரிந்தில! இறைவனின் திறனே!

நீல வானிலே ஓவியம் தீட்டிய தாரடா
சோலைப் பூவினுள் தேன்ரசம் ஊற்றிய
தாரடா

ஞாயிறு ஒளிர்வது இயற்கையின் விதியோ!
தாய்கரு சுமப்பது படைத்தலின் வழியோ!
சேயுயிர்த் தெழுதலும் உயிர்களின்
கதியோ!
மாயணுச் செயலதும் பரமனின் களியோ!
(நீல வானிலே...)

---------------------



வெற்றியாளர் ச. லெட்சுமிதா என்ன கூறுகிறார்

அன்புடையீர் வணக்கம்.
 தொன்மை தமிழ் விரும்பி தெவிட்டாத சொல்ல எடுத்து என் மைப் பேனாவின் கவி முனைக்கு இரை கொடுத்து  ...ஆற்றாத இன்பத்தில் ஊற்றாக உயிர் பெற்று.. பெரும் பேற்றாக  சந்தங்களை  சொந்தமாக்கி  வென்றது பற்பலக்கவிதைகள். அவைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக பெற்றது முதற் பரிசு வென்ற என் கவிதை 
" ஒரு சரணம் இணைய தள" கவிதை போட்டியில். 

பள்ளி பிராயத்தில்  பல போட்டிகள் பதம் பார்த்தேன் பரிசுகள் பல பெற்று பலவாறு  தேர்ந்தேன்.மேடைபேச்சு மேலோங்கி நின்ற  தருணம் மேல்நிலைப்பள்ளி என்னை மெச்சி புகழ்ந்தது. மாவட்ட மாநில வாரியாக என் பேர் வளர்ந்தது  பலவாறாய்  தடம் பதித்து இன்று கவிபுலம் மிதித்து உயர்ந்தது.  பலகாறும் நூற்களை படித்து இன்புற்றேன். சில காலம் பாக்களை வடித்து இன்புற்றேன். 
நான் வளரவில்லை தமிழ் மொழியே எனை வளர்த்தது தமிழ் எத்திக்கும்  தித்திக்கும் இயல்பான மொழி யன்றோ.. எனவே  என் போன்ற  இளம்மொழியாளர்க்கும் தித்திக்கும். மகாகவி வல்லுனர்களை மானசீக குருவெனக்கொண்டு  படையுங்கள். நற்கவிகள் விதையுங்கள் அதற்கு  ஈடு இணையற்ற ஒரு சேவையில் " ஒரு சரணம் இணையதள" கவிதைபோட்டி  உறுதுணையாக நிற்கும் என நம்புகிறேன். நான் பெற்ற இப்பரிசு போல் பங்கு பெரும் அனைவரும் பெற உளமார்ந்த வாழ்த்து களுடன்  " ஒரு சரணம்" குழுமத்தின் அனைவருக்கும் நன்றி உரைத்து மேன்மேலும் சிறந்து சிறகு விரித்து பறந்து உயர உயர இறைதுதிப்பாடி  பிரார்த்திக்கிறேன். 
நன்றிகள் மீண்டும் உரித்தாக்குகிறேன் நன்றிகள் பல.

அன்புடன்
  ச.லெட்சுமிதா