icon

Winner N Thiyagarajan

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து

உறவாடும் நேரமடா...

உறவாடும் நேரமடா...


கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா..

வளர்ந்தாலே போதுமடா..

(உன்னைக்)


சித்திரப்  பூபோலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறேன்ன வேண்டுமடா...

வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)


(மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல் பகுதிக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்.)

N Thiyagarajan எழுதிய வரிகள்:

பண்டிகை நாளில் பட்டு வண்ண ஆடை
பாசாங்கு சொல்லி புரிவாயே ஜாடை
பால்மணம் மாறா பிள்ளை உன் வாடை
பாவையின் நெஞ்சில் ஆடிடும் மேடை
பிஞ்சு முகம் பார்க்க வந்தாடும் இன்பம்
பலகோடி ஆகுமடா
பலகோடி ஆகுமடா
(உன்னைக்)



வெற்றியாளர் N Thiyagarajan என்ன கூறுகிறார்

ஒரு சரணத்திற்கு என்னுடைய நன்றிகள் கோடி

தமிழில் பாடல் புனைவிற்கு போட்டிகள் இல்லை என்னும் பெருங்குறையை orusaranam.com தீர்வாக அமைந்தது என்றே சொல்லலாம்.

சிறு வயதில் இருந்தே தமிழ் மீது தீராதக் காதல் கொண்ட எனக்கு சிறப்பாக பாடல்கள் எழுதவேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருந்ததுண்டு. 

நமக்குப் பரிசு கிடைக்கவில்லை, நன்றாகத்தானே எழுதியிருந்தோம் என்ற ஏக்கத்தோடு தான் வெற்றி பெற்றப் பாடல்களை வாசித்தேன். அப்போது ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன். orusaranam குழுவானது எப்போதும் நடுநிலை தவறாமல் சரியானப் படைப்புகளை தேர்ந்தெடுக்கிறது.

ஒரு சரணத்தின் இந்த இனிய பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள் மற்றும் ஒரு முறை நன்றிகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியும், பிரியங்களும்
நா. தியாகராஜன்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.