icon

Winner Kalpana Sanyasi

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனனதன தனனதன தனனதன தனனா 

தனனதன தனனதன தனனதன தனனா


தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா


தனனதன தனனதன தனனதன தனனா 

தனனதன தனனதன தனனதன தனனா


தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா


Kalpana Sanyasi எழுதிய வரிகள்:

பொண்ணுங்களை நம்பிவிடும் நல்லப்பயல் எவனோ
என்னுடைய லவ்வுக்கதை தெரிந்துகொள் மகனே

ஒரு நாள் அவள் அருகினில் அருகினில் வந்தாள்
மறு நாள் எனை முகவரி முகவரி கேட்டாள்
உடனே அதை அவளிடம் அவளிடம் சொன்னேன்
விழியால் ஒரு சிரிப்புடன் சிரிப்புடன் சென்றாள்

பொண்ணுங்களை நம்பிவிடும் நல்லப்பயல் எவனோ
என்னுடைய லவ்வுக்கதை தெரிந்துகொள் மகனே

ஒரு நாள் எனை சந்திக்க சந்திக்க வந்தாள்
எனை நான் தர அருகினில் அருகினில் சென்றேன்
உடனே ஒரு காகிதம் கைகளில் தந்தாள்
அன்பே ஒரு பாலிஸி எடுத்திடு என்றாள்



வெற்றியாளர் Kalpana Sanyasi என்ன கூறுகிறார்

ஒரு சரணத்திற்கு என்னுடைய நன்றி மடல்

தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாடல்களோடு வாழ்பவர்கள் தமிழர்கள் நாம். எனினும் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் இருப்பதைப் போல் தமிழில் பாடல் புனைவிற்கு போட்டிகள் இல்லை என்பதே உண்மை. அந்த வகையில் தமிழில் பாடல் எழுதுபவர்களுக்கு அருமையான வாய்ப்புகளை வழங்குகிறது ஒரு சரணம் தளம். 

இந்த தளத்தில் ஒரு சிலப் பாடல்களை போட்டிக்கென பதிவிட்டுவிட்டு, நமக்குப் பரிசு கிடைக்கவில்லையே, நன்றாகத்தானே எழுதியிருந்தோம் என்ற ஏக்கத்தோடுதான் வெற்றி பெற்றப் பாடல்களை வாசித்தேன். அப்போதுதான் புரிந்தது அந்தப் பாடல்கள் ஆழமான பொருள் பொதிந்ததாகவும் அழகிய தமிழில் சிறப்பாக அமைந்திருப்பதுவும். இது என்னுடைய பாடல் புனைவை மேலும் மேம்படுத்தியது எனலாம். 

தரமான பாடல்களுக்கே ஒரு சரணம் பரிசு வழங்குகிறது. இந்த நேர்மை நெறி போற்றுதலுக்குரியது என்றால் ஒரு சரணம் முன்னெடுத்து நடத்துகிற போட்டிகளின் எண்ணிக்கையும் அதற்காக அவர்கள் வழங்குகிற பரிசுத் தொகையும் எழுத்தாளர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிற விஷயம் ஆகும். 

தமிழ்ப் பாடல்கள் மேல் ஆர்வம் கொண்ட ஒரு தமிழராக ஒரு சரணத்திற்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும், கூடவே ஒரு சரணத்தின் இந்த இனிய பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளும்!

அன்புடன்,

கல்பனா சன்யாசி.