icon

Winner கி.சத்தியன்.

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனன நனன தனன நனன தனன நா 

தனன நனன தனன நனன தனன நா


தான தனன தான தனன தானன நா 

தான தனன தான தனன தானன நா 

தான தனன தான தனன தானன நா 

தான தனன தான தனன தானன நா 


தனன நனன தனன நனன தனன நா 

தனன நனன தனன நனன தனன நா


தான தனன தான தனன தானன நா 

தான தனன தான தனன தானன நா 

தான தனன தான தனன தானன நா 

தான தனன தான தனன தானன நா 


கி.சத்தியன். எழுதிய வரிகள்:

அரும்பில் விளைந்த கவிதை அழகின்
முக மன்றோ!
கரும்பின் சுவைக்கு உவமை சிவந்த
இதழன் றோ!

கானக குயிலின் ஞானக் குரல்கள்
தேன்மழை யாய்!
ஆசைக் குழந்தை பாஷை இனிக்கும்
மாதுளை யாய்!
வானம் உனக்கு நீளும் வரைக்கும்
போ துணி வாய்!
வேணு மளவில் வாழ்த்துக் கவிகள்
கேள் பணிவாய்! (அரும்பில்)

காலின் சதங்கை காதில் இசைக்கும்
சீதன மே
சோலை மயில்கள் தோகை விரிக்கும்
வா தினமே!
ஞாலம் புகழும் காலம் இசைந்து
வாழ் மனமே!
சால்பு முளைத்த பால்ய அரசை
ஆள் சுகமே! (அரும்பில்)



வெற்றியாளர் கி.சத்தியன். என்ன கூறுகிறார்

வணக்கம். 


சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு  பிடிக்கும். கற்பனைக் குதிரையை அவ்வபோது அவிழ்த்து விடுவேன். நிறைய கவிதைகள் குப்பைக்காகிதமாக்கி கொண்டேன்


படிக்கிற காலம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். ஆனாலும் ஆதங்கம். ஏக்கம். 


ஒருமுறை முகநூல் பக்கங்களில் சுற்றிஅலைந்தேன். என் கண்களில் பளிச்சிட்டது ஒரு சரணம் இணையதளம் மின்னலென விழித்தேன். எனக்கு பிடித்தமான அந்த தளத்தையே சுற்றி சுற்றி வந்தேன் அருமையான கவிதை பிறந்தது சந்தக்கவிதைகள் இயல்பாகவே எனக்கு வரும். எளிமையான என் கவி நடைக்கு ஏற்றாற்போல் உள்ள சந்தக்கவிதை

ஒரு சரணம் இணையதளத்திற்கு அனுப்பினேன். என் கவிதைக்கு முதல் பரிசு என என் காதுகளுக்கு எட்டியதும்  நான் பெற்ற மகிழ்ச்சி அபரிமிதமானது


இத்தளத்தை உருவாக்கி என் போன்றோருக்கு வழிகாட்டும் உன்னத இந்த குழுமத்திற்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். மீண்டும் நன்றிகள் பல.