
Winner கி.சத்தியன்.
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
தானனா தனதானனா தனதானனா தனதானனா
கி.சத்தியன். எழுதிய வரிகள்:
சுடுகாடு தான் சுகவீடுதான்
கடுகாகநான் சிறுஆளாகினேன்
தெருக்கோடிதான் எனதாட்சிதான்
கறிக்காகநான் விலைஆடாகினேன்
( சுடுகாடு..)
சரணம்
வானில்லா நிலவாக்கியேன்
விடியாதுபாழ் கனவாக்கினாய்
மீனில்லா புனலாக்கியேன்
முடமானவீண் நினவாகினாய்
நாணில்லா தனுசாக்கியேன்
நகையாடிகூன் உடலாக்கினாய்
தூணில்லா குடிலாக்கியேன்
தளர்வேற்றிவீழ் மரமாக்கினாய்
( சுடுகாடு...)
வீதிமேல் இரைத்தாயம்மா
விதைபோலநான் முளைத்தேனம்மா
(அ) நாதியாய் சபித்தாயம்மா
அதில் கோழைநான் திளைத்தேனம்மா
ஜாதியால் பிரித்தாயம்மா
சிதையாய்நான் சிதைந்தேனம்மா
ஏதுயான் இழைத்தேனம்மா
பிழைகூறுவாய் தயைகூர்ந்தம்மா
( சுடுகாடு..)