Winner யாழன்
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தனநன தனநன தனநன தானன தன்னனநா
தனநன தனநன தனநன தானன தன்னனநா
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தனநன தனநன தனநன தானன தன்னனநா
தனநன தனநன தனநன தானன தன்னனநா (முதல் பல்லவி மீண்டும்)
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்
யாழன் எழுதிய வரிகள்:
பல்லவி :
எதிர்வரும் எதிரிகள் உதிரிகள் ஆகுவர் என்னெதிரே
அதிரதன் மகனென அகிலத்தோர் ஏத்துவர் என்பெயரே
சரணம் : 1
எப்படை ஏகினும் அப்பளம் போல்விழும் ஒருநொடியில்
தப்பிய வீரர்கள் தத்துவம் ஏத்துவர்
புலிக்கொடியில்
விற்படை வீசிடும் அத்தனை பானமும் பனித்துளிகள்
சொற்களைக் கோர்த்துச் சொல்லுவர் எனக்குப் பழமொழிகள்
எதிர்வரும் எதிரிகள் உதிரிகள் ஆகுவர் என்னெதிரே
அதிரதன் மகனென அகிலத்தோர் போற்றுவர் என்பெயரே. ( பல்லவி )
சரணம் : 2
செந்தமிழ் பேசிடும் சண்முகன் வேலது வலதுகரம்
இந்திரன் ஏந்திடும் வச்சிர ஆயுதம்
இடதுகரம்
அந்தமில் லாதொரு இன்பத்தை ஈவது எனதுநிலம்
சந்தங்கள் ஏற்றிச் சிந்தினில் பாடுவர்
எனதுபலம்