icon

Winner ரோஸ்லின் மேரி

  • வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே 

நில்லென்று கூறி நிறுத்தி வைத்துப் போனீரே


கடல் தாண்டிப் போய் காசு பணம் சம்பாதித்து வந்து கட்டு வைத்து வீடு கட்டி களித்திருப்போம் என்றீரே

சிமைக்குச் சென்று சீக்கிரமே வருகிறேன் என்று ஓர்மைக்கு ஓர் குழந்தை உ(க)ருவாக்கித் தந்தீரே

முத்தத்திலும் மோகத்திலும் மூடி வைத்த பாசத்தைப் பச்சை உடம்பை பேணுவதில் பரப்பி வைத்துப் பொழிந்தீரே

கூடப்பிறந்தவர்கள் எல்லோரும் கார் நிறம் தான் வாழ வந்தவள் நீ மட்டும் வைகறை சிவப்பெனச் சொன்னீரே


சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே 

நில்லென்று கூறி நிறுத்தி வைத்துப் போனீரே


(இந்த ஒப்பாரிப் பாடலுக்கு இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்)


ரோஸ்லின் மேரி எழுதிய வரிகள்:

தோள் சாயும் போதெல்லாம் நீர் கசிந்த என் மலர்களை இன்று பிறர் பறிக்க விட்டீரே
வளையோசை கூடாது மோகத்தில் என்றவரே என் கை வளையல் உடையும் ஓசை கேட்டீரா
உன்னை பிரியேன் என்று சொல்லி இன்று
என் உயிர் பறித்து என்னை (என்னில் உன்னை பிரித்து) ஜடமாக்கி விட்டீரே
விதை ஒன்று இட்டீரே
அது முளைக்கும் முன் என்னை விதவை ஆக்கி சென்றீரே



வெற்றியாளர் ரோஸ்லின் மேரி என்ன கூறுகிறார்

தமிழ் நெஞ்சங்களுக்கு என் வணக்கம்.

 

எனது பெயர் ரோஸ்லின் மேரி .*ஒரு சரணம் *குழு அளித்த வாய்ப்பின் மூலம் நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.

 

இந்த பதிவில் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

 திருமணத்திற்கு முன் நான் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தேன் , இப்பொழுது இல்லத்தரசியாகஇருக்கிறேன்.

 

 சிறுவயதிலிருந்தே கவிதைகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது.எனது வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்திற்குப் பின்னும் ஒரு கவிதை உண்டு அது என் சிறு குறிப்பேட்டில் எழுதி வைப்பேன்.

 

 என்னுடைய கவிதைகள் நான் மட்டுமே அறிந்தவை , ஒரு சரணம் வலையகம் மூலம் என்னுடைய கவிதைகள் இன்றுஉலகறிய இருக்கின்றன.

 

இந்த வாய்ப்பானது என் தமிழ் பற்றினை வளர்க்கும் விதமாகவும் எழுத்துத் திறனை வளர்க்கும் விதமாகவும்இருக்கின்றது .

 

ஒரு சரணம் என்னும் வலைதளத்தை உருவாக்கி இதன் மூலம் தமிழின் பெருமையை உலகறிய செய்து, மேலும் என்போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குப் பரிசுத்தொகைவழங்கி தமிழ் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் *ஒரு சரணம்* குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும்.