icon

Winner Revathy

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
Revathy எழுதிய வரிகள்:

சித்திரை திருவிழா

சித்திரை நிலவாக
செந்தமிழின் சுவையாக
செம்மலரின் நிறமாக
செல்வ மகள் பிறந்தாளாம்

வைகாசி வாசலிலே
வைகறை பூவாக
வளமான எழிலுடன்
வண்ணப்பூ மலர்ந்தாளாம்

ஆனி பூரத்தில்
அழகாய் பூத்தாளாம்
ஆடி இளங்காற்றில்
அன்னம் நடந்தாள்.

ஆவணி அரும்பாக
தாவணி கரும்பாக
புரட்டாசி யில் பூத்து விட்டாள்
பூரணமாகி விட்டாள்.

ஐப்பசி மழையாக
அன்பனை கண்டு விட்டாள்
கார்த்திகையில் கன்னியவள் கொஞ்சும் கிளி யாகி விட்டாள்

மார்கழி மாத பனியாக
மங்கையவள் குளிர்ந்து இருந்தாள். மாங்கனி யாய்
பழுத்திருந்தாள்.

தையில் தையலாள்
தமிழ்ப் பெண்ணாய்
தலைவன் கைப்பற்றினாள்
தாம்பத்யம் செய்ய வந்தாள்.

மாசியில் மலரணிந்து
மன்னவன் தோள் சேர்ந்தாள்.
மடி சாய்ந்தாள். மங்கை
முகம் சிவந்தாள்.

பங்குனியில் என் வாழ்க்கை
பங்கு நீ என பாங்காய்
தாங்கினாள் தலைவி
தலைவனடி பணிந்தாள்.
‌. இவள்
‌‌. சு. ரேவதி.










ஆவணி கனவாக