icon

Winner Devika Thiruppathy

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனநன தனநன தனநன தானன தன்னனநா

தனநன தனநன தனநன தானன தன்னனநா


தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்

தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்

தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்

தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்


தனநன தனநன தனநன தானன தன்னனநா

தனநன தனநன தனநன தானன தன்னனநா (முதல் பல்லவி மீண்டும்)


தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்

தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்

தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்

தத்தன தாநன தத்தன தாநன தனநனநன்


Devika Thiruppathy எழுதிய வரிகள்:

இருட்பகை இடர்ப்பட சுடர்விடும் சூரியச் செங்கதிரே
செறுபடை சிதறிட புயலெனச் சீறிய மன்னவனே

வெஞ்சினச் சூதினை வஞ்சகப் போரினில் அடக்கியவன்
வெற்றியும் காற்றினில் பற்றிடும் தீயென பரப்பியவன்
செய்தநற் சாதனை செந்தமிழ்ப் பாரினில் நிரப்பியவன்
கட்டிய தோரணம் கட்டியம் கூறிட துலங்கியவன்

இருட்பகை இடர்ப்பட சுடர்விடும் சூரியச் செங்கதிரே
செறுபடை சிதறிட புயலெனச் சீறிய மன்னவனே

நன்னெறி நாயகன் நுண்ணறி வானவன் வடிவழகன்
நல்வழி தேடிய மக்களும் நாடிய  அருந்துணைவன்
வில்லெறி வீரமும் வல்லமைத் தீரமும் வளர்திறமும் 
கட்டுடல் தேகமும் கட்டறு வேகமும் கலந்திட்டவன்



வெற்றியாளர் Devika Thiruppathy என்ன கூறுகிறார்

ஒரு சரணம் குழுவினருக்கும், நான் பேசும் மொழியாகத் தமிழை எனக்களித்த   எம்முன்னோருக்கும், சகத் தமிழ் சகத்தினர்க்கும் அன்பு வணக்கம் !

துள்ளி ஓடும் வெள்ளி அருவி போல் மனக் குன்றுகளில் பட்டுத்தெறிக்கும் தமிழ் நதியின் நெளிவு சுளிவுகளில் வளைவு குழைவுகளில் நீள அகலங்களில் நீந்திக் களித்த எத்தனையோ தமிழ் ஆர்வலர்களில் அடியேனும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

பருகிக் களிக்க பல ரசங்களும் அருந்தி மகிழ  அறுசுவைகளும் கொட்டிக் கிடக்கும் தமிழிலே நான் வெட்டி எடுத்து வைத்தது ஒரு துளி. அந்த ஒரு துளி எனக்கீந்தது வெற்றிக்கனி !

வழங்கிய ஒரு சரணம் குழுவினருக்கு மிக்க நன்றி! வருங்கால இளந்தமிழ்க் கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக ஒரு சரணம். காம் நீண்டு நெடிது உயர என் விருப்பங்களை வாழ்த்தாக்குகிறேன் !

என்னைப்போல் எத்தனையோ பேர்களின் கவிதைப் பயிற்சிக்கும் முயற்சிக்கும் வழி அமைத்து ஊக்கமும் ஆக்கமும் தந்து கொண்டிருக்கும் நமது ஒரு சரணம்.காம் வலைத்தளத்திற்குக் கோடானு கோடி நன்றிகள் !

இவ்வலைத்தளத்தின் அரிய பணி சிறக்கவும் இத்தளத்தின் இலக்குகள் வெற்றி பெறவும் பெருவிருப்பமும் எதிர்பார்ப்பும் கொண்டு வாழ்த்துவதில் மகிழ்கிறேன் ! 

எண்ணற்ற கவிஞர்கள் இதன் வழி உருவாக வேண்டும். அவர்தம் எண்ணப்படி வெற்றி பெற வேண்டும் !

மகிழ்வும் நன்றியும் ! 

என்றும் அன்புடன்
உ.திருப்பதி.