Winner Janani Natarajan
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
Janani Natarajan எழுதிய வரிகள்:
சித்திரை மாதம் ஒன்று என்றும் முத்திரை பதிக்கும் நன்று!
பத்திரை மாற்று தங்கம் எங்கள் தமிழகம் தழைக்கும் வென்று!
கசக்கும் வேம்பூவும் இனிக்கும் இன்று புளிக்கும் மாங்காயும் இனிக்கும்!
கொடுக்கும் கைகளும் உயரும் இன்று ஒடுக்கும் கைகளும் விடுக்கும்!
கறுக்கும் வானமும் சிவக்கும் இன்று நெருக்கும் துன்பமும் நெகிழும்!
தடுக்கும் தடைகளும் தகரும் இன்று எடுக்கும் வேலைகளும் முடியும்!

இரவும் பகலும் சமமே என்றும் வரவும் செலவும் சமமே!
இன்பமும் துன்பமும் சமமே என்றும் இன்னலும் மகிழ்ச்சியும் சமமே!
கழிதலும் புகுதலும் சமமே என்றும் இகழ்தலும் புகழ்தலும் சமமே!
நண்பரும் பகைவரும் சமமே என்றும் மன்னரும் மக்களும் சமமே!