icon

Winner சையத் அமீருல்லாஹ் சை.மு.

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா

தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா


தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா


தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா

தனநானனா தனநானனா தனநானனா தனனாநானனா


தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா

தானனா தனதானனா தனதானனா தனதானனா


சையத் அமீருல்லாஹ் சை.மு. எழுதிய வரிகள்:

அகலாததே அகமானதே நிகரானதோ நிகழாதானதே
கனவானதே கனமானதே பரிவானதோ பிரிவாகாததே

தேய்கிறேன் உயிர்ப்பாதியோ எனைநீங்கியே உடல்வாழ்கிறேன்!
மாய்கிறேன் கடும்வாடையே குளிர்கூடியே குயில்வீழ்கிறேன்!
தீய்கிறேன் இடிதாங்கியே உயர்ஆலமும் அலைந்தாகிறேன்!
தேய்கிறேன் நறுஞ்சாந்தமோ புகையாகவே வெளிசேர்கிறேன்!

அகலாததே அகமானதே நிகரானதோ நிகழாதானதோ
கனவானதே கனமானதே பரிவானதோ பிரிவாகாததோ

சாய்கிறேன் நெடுமாடமோ மெதுவாகவே சிதைந்தாகிறேன்!
ஓய்கிறேன் வலிகூடியே தகிநெஞ்சிலே நினைவேந்தியே!
காய்கிறேன் உவர்நீரிலே இனிமைநிறை முகம்தோன்றுதே!
வீகிறேன் கவியாகியே வெறுந்தாள்களே எனைஏந்துதே!



வெற்றியாளர் சையத் அமீருல்லாஹ் சை.மு. என்ன கூறுகிறார்

முதலில் Orusaranam.com இணையதளத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்


தமிழ்க்கவிதையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்ட காலம் என் பள்ளிக்காலம்.அஃது அப்படியே வளர்ந்து மேலோங்கிக் கல்லூரியில் தமிழையே என் படிப்பாக எடுக்கவைத்தது.


இளங்கலையில் சோதனை முயற்சியாகச் செய்துகொண்டிருந்த கவிதைகளுள் முழுமையாக ஆழ்ந்துபோனேன்.


மரபின்மீது பற்றுவைத்து மரபுச்செய்யுள் இயற்றும் நுணுக்கங்களைக் கற்றறிந்தேன்.


சந்தக்கவிதைகளின்மீது விருப்பம் இருப்பினும் நான் அதிகம் எழுதவில்லை. மரபிலேயே நல்ல பயிற்சி பெற்றேன்.


Instagram வாயிலாகத்தான் இந்த இணையதளத்தில் நுழைந்தேன். இஃது இவ்விணையதளத்தில் என் முதல் சந்தப்பாடலாகும்.


பலமுயற்சிகளுக்குப்பின் இப்பாடலை வடித்தேன்.


ஒருசரணம் குழுவினரின் இம்முயற்சியின் மூலமாகப் பல நற்றிறமையாளர்கள் வெளிவருவார்கள் என்று நம்புகிறேன்.


ஒருசரணம் குழுவினரின் திறமைக்கான தேடல் இன்னும் தொடரவேண்டும்.


இக்குழுவினரின் முயற்சியின் வாயிலாக எனக்கும் சந்தக்கவிதை நன்றாக இயற்ற வருமென்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது.


புதுக்கவிதையின் அதிகபட்சமான சாத்தியங்களுக்குள் பயணித்துக்கொண்டிருக்கும் எனக்கு இஃது ஒரு மீள்பயிற்சிக்கான களமானது.


நற்றமிழ் எழுதவேண்டும் எத்தனையோ தமிழ்ச் சொந்தங்களுக்கு இஃது ஒரு பெருமேடையும் பெருமைமிகுந்த மேடையுமாய் இருக்குமென்பதில் ஐயமில்லை.


இக்குழுவில் பயணித்துக்கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியையும் பாராட்டுதல்களையும் வாழ்த்தினையும் கூறிக்கொள்கிறேன்.


இப்படிக்கு,

அன்புடன்,

சையத் அமீருல்லாஹ் @ புதுக்கவிதை

முதுகலை முதலாமாண்டு