icon

Winner K.Jeevakumari

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தனனதன தனனதன தனனதன தனனா 

தனனதன தனனதன தனனதன தனனா


தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா


தனனதன தனனதன தனனதன தனனா 

தனனதன தனனதன தனனதன தனனா


தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா

தனனா தன தனநன தனநன தனனா


K.Jeevakumari எழுதிய வரிகள்:

மனிதயின குணமதனில் தனிப்பெருமைச் சிரிப்பாம்!

மனதிலுள்ள கவலைகளைக் களைவதிதன் பொறுப்பாம்!


சரணம் 1

முகமே புது மலரென விரிந்திடும் சிரிப்பால்

அகமே மன வலிதனை மறந்திடும் களிப்பால்

சினமே சில மணியினில் அகன்றிடும் சிரிப்பால்

மனமே புதுப் பொலிவினை அடைந்திடும் நகைப்பால்


மனிதயின குணமதனில் தனிப்பெருமைச் சிரிப்பாம்!

மனதிலுள்ள கவலைகளைக் களைவததன் பொறுப்பாம்!


சரணம் 2

சினத்தால் விழி சிவந்திட விளைவது அழிவாம்.

சிரித்தால் மனம் களித்திட அடைவது சுகமாம்.

துயரால் வரும் வலிதனைக் குறைப்பது சிரிப்பாம்.

செயலால் பிற உயிரினம் செயயியலாச் சிறப்பாம்.


மனிதயின குணமதனில் தனிப்பெருமைச் சிரிப்பாம்!

மனதிலுள்ள கவலைகளைக் களைவதிதன் பொறுப்பாம்!