எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

images

சினிமாப் பாடலாசிரியர்கள் வரலாறு

இந்த இணையப் பக்கத்தில் சில சினிமாப் பாடலாசிரியர்கள் வரலாறு பற்றியும் அவர்கள் எழுதிய சில பாடல்கள் பற்றியும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். சில பாடல்களுக்கு வலையொளி இணைப்புகளும் அளித்துள்ளோம்.

உடுமலை நாராயணகவி


1899ஆம் ஆண்டில் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூவிளைவாடி என்னும் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார் உடுமலை நாராயணகவி(Udumalai Narayanakavi) . இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.

இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்தர். நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.அக்காலத்தில் நாடகத் துறையில் புகழ்பெற்ற மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்த உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர், ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடன் சென்ற உடுமலை நாராயணகவி முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார். யாப்பிலக்கணம் முழுதும் கற்றுணர்ந்தார். மதுரை நாடக மன்றங்கள் இவருக்கு உதவியாய் இருந்தது.

மதுரையில் வாழ்ந்த போது அங்கு நாடகங்கள் நடத்திய டி.கே.எஸ் நாடகக்குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ் கிருஷ்ணனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கலைவாணர் தொடர்பால் திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது.

நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுத வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அதிலிருந்து திரைப்பாடல்கள் எழுதவும் நாராயணகவிராயர் தொடங்கினர்.

இவரது பாடல்கள் கருத்து மிக்கவையாகவும், அறியாமையில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இவரது பெருமையை போற்றும் விதமாக இந்திய அரசு தபால் துறையில் தபால் தலை வெளியிட்டுள்ளது. உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்

உடுமலை நாராயணகவி எழுதிய சில சிறப்பான பாடலைகள்:

அன்னியர்கள் நமை யாண்ட தந்தக் காலம்;
நம்மை நாமே ஆண்டு கொள்வ திந்தக் காலம்!
பேசுதற்கும் உரிமை யற்ற தந்தக் காலம்;
பிரச்சாரப் பெருமை யுற்ற திந்தக் காலம்!
மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்;
மடமை நீக்கிநம் உடமை கோருவது இந்தக் காலம்!

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி
மறைப்பதில் பயனுண்டோ - கையால்
மறைப்பதில் பயனுண்டோ - அதனால்
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே.....

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம் அணி பெரும் ஓர் அங்கம்

நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்(Pattukottai Kalyanasundaram) காலம் 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959 வரை. இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை என்னும் ஊரில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.

கலயாணசுந்தரனார் சிறு வயதிலிருந்தே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றினார்.

கலயாணசுந்தரனார் பல முத்திரை வரிகளை எழுதியுள்ளார். அவற்றில் வெகு சில வரிகள்:
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே

குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே!

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷடமில்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

உன்னக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா…

ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக

சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து அழுதபிள்ளையைத் தேத்துனா

காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்
கடந்தபின்னே அமைதி எங்கு பெறுவான்? - காலம்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?
அன்புமயில் ஆடலுக்கு மேடையமைத்தான்
துன்பமெனும் நாடகத்தைக் கண்டு ரசித்தான்

கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே-என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே

கவியரசு கண்ணதாசன்


கவியரசு கண்ணதாசன்(Kannadasan) அவர்களின் காலம் 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன். இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி என்கிற தம்பதிக்கு 8வது மகனாக பிறந்தார்.ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். 1980ம் ஆண்டு இவர் சாகித்ய அகாதமி விருது சேரமான் காதலி படைப்பிற்காகப் பெற்றார்.

கண்ணதாசன் திரைப் பாடல்கள் மட்டுமல்லாமல் காப்பியங்கள், தனிக் கவிதை தொகுப்புகள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், சிறு கதைகள், அர்த்தமுள்ள இந்து மதம், உரைகள் ஆகிய பலவற்றை படைத்தது இலக்கிய தொண்டாற்றியுள்ளார்.

முத்தையா என்கிற கண்ணதாசனின் முத்தான மிகச்சில வரிகள்:

அவருடைய “நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே” என்னும் வரி அவருடைய காவிய தாயின் மூத்த மகன் கம்பனுக்கே வாராத கற்பனை.

கோப்பையில் என் குடியிருப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்!

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!

காலையில் மலரும் தாமரைப் பூ! அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா

நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில் தேனெடுத்து வா வா வா..

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம் !

பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா

அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழ‌காய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!

காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா!

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை
சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி

செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா
சேர்ந்தவர்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா
கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை ஃபடாஃபட்

கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது..அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா?
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்

போனால் போகட்டும் போடா;
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது;

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் இருந்தால்
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

கவியரசரின் தனிப் பாடல்கள் சினிமாப் பாடல்கள் போலவே மிகவும் பிரசித்தி பெற்றவை.
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

நேரு மறைந்தபோது
சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!
.
.
சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?

சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்துப் பார்த்ததிலே
வடநாட்டு எலும்புஎன்று வந்தஎலும்பு இல்லையடி
தென்னாட்டு எலும்புஎன்று தெரிந்தஎலும்பு இல்லையடி
எந்நாட்டு எலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி
ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லைஎனில் எந்நாளும் துன்பமடி

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செ(சொ)ல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்

கவிஞன் யானோர் காலக்கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது,
புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது

மாறாதிருக்க நான் வனவிலங்கல்ல!
மாற்றம் என்பது மானிடத் தத்துவம்!
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.

கவிஞர் வாலி


கவிஞர் வாலி (Vaali) அவர்களின் இயற்பெயர் டி. எஸ். ரங்கராஜன்.இவருடைய காலம் 29 அக்டோபர் 1931 - 18 சூலை 2013. வாலி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார்.
வாலி அவர்கள் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்று கவிதை மற்றும் கட்டுரைகள் வரைந்தனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாத. அதோடு திருச்சிராப்பள்ளி வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு, வாலிக்குக் கிடைத்தது. வாலிக்கு, ஓவியத்திலும் மிகுந்த ஆர்வமிருந்தது.
வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பாடலோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வாலி எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் எழுதியதாக நினைப்போரும் சொல்வோரும் உண்டு.

எழுதத் தொடங்கிய பல நாட்களுக்‍குப் பிறகுதான் தமிழ் இலக்‍கணத்தையே தான் இனம் கண்டுகொண்டதாக வாலி குறிப்பிடுகிறார்.
வாசித்துத் தமிழ்கற்றோர்
வரிசையிலே யானில்லை;
யோசித்துக்‍ கவிபுனையும்
யோக்‍கிதை தானில்லை;
நேசித்தேன்; நெஞ்சாரப்
பூசித்தேன்; நின்னடியில்
யாசித்தேன் அடடாவோ!
யானும் ஓர் கவியானேன்!

வாலி அவர்களின் சில பாடல் வரிகளை பார்ப்போம்:
மலரே குறிஞ்சி மலரே
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவதுதானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்ன ஆனாள்

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.....
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் - உன்
மடிமீதுதான் கண் மூடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்

பூம‌கள் மெல்ல‌ வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை ப‌ண்ணாகும்
கால‌டித் தாம‌ரை நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும்
இந்த‌க் காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை

கோடி மின்னல் போலே ஒரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலே ஒரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தல் தீயோடு பஞ்சை சேர்த்தல்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றால்
நாளை என் செய்வாளோ

கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா … மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி
என்னடி மீனாட்சி… சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த வனத்தில் மறைந்திருக்கும் துளிவிஷம்
நெஞ்சம் தவித்திடும் நாளில்
நீயோ அடுத்தவன் தோளில்
எனை மறந்து போனது நியாயமோ
இந்தக் காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்

எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வைக்கிர வாணம் அந்த வானையே தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரைதான் தட்டிப்பாடு

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்-நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்-நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்