தமிழ் கவிதைகள், பாடல் வரிகள் மற்றும் கவிதை போட்டிக்கான தளம் - ஒரு சரணம்

ஒரு சரணம் குழு புகைப்படம் (Orusaranam team photo) / Orusaranam kulu pugaippadam

Orusaranam.com எப்படித் தொடங்கப்பட்டது:

ஒருமுறை சந்திரபாபு அவர்கள் பாடிய ‘சிரிப்புவருது சிரிப்புவருது’ என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது இந்தப் பாடலுக்குக் கவிஞர் இன்னும் ஒரு சரணம் எழுதியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றியது. இந்த அவா பல தமிழ்ப் பாடல் விரும்பிகளுக்கும் இருக்கும் என்று உணர்ந்து அதற்காக ஒரு தளம் அமைக்க எத்தனித்ததின் விளைவு தான் இந்தஒருசரணம்.காம் இணையத்தளம். ஒரு சரணம் மட்டுமல்லாமல் சந்தத்திற்கும் பாடல் எழுதத் தமிழ் அறிந்தோர் ஆர்வமாய் இருப்பார்கள் என்று எண்ணி சந்தப்பாடல் போட்டியையும் சேர்த்துக்கொண்டோம். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் ஊகத்தைக் கொண்டு ஒருசரணம்.காம்  இணையதளத்தைப் பல பரிமாணங்களில் வளர்த்தெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் இணையப் பயன்பாட்டுத் தளங்களை RandR Consultantக்காக உருவாக்குபவர்கள். நாங்கள் உருவாக்கிய முதல் பயன்பாட்டுத் தளம் gorandr.com.

நோக்கம்:

இந்த இணையதளத்தின் நோக்கம் தமிழ்ப் பாடல் எழுதுவோரைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் மொழியின் தொன்மையையும், சிறப்பு மற்றும் நளினத்தையும் உலகுக்குப் பறைசாற்றுவதாகும். இங்குப் பாடல் பதிவு செய்வோரின் திறமை வேறு ஊடகங்களுக்கும், தளங்களுக்கும் மற்றும் மேடைகளுக்கும் அவர்களுக்கான வாய்ப்பைத் தேடித்தரும் என்று நம்புகிறோம்.

பாடல் போட்டி நடத்தப்படும் முறை:

தமிழ்ப் பாடல் எழுதும் போட்டி:

எங்களின் முதன்மை நிகழ்வு ஆண்டு முழுவதும் நடைபெறும் இன்னும் ஒரு சரணம் எழுதும் மற்றும் கொடுத்த சந்தத்திற்குப் பாடல் எழுதும் போட்டிகளாகும். இது அனைத்து பின்னணியிலிருந்தும் பங்கேற்பாளர்களை அவர்களின் அசல் தமிழ்ப் பாடல்களைச் சமர்ப்பிக்க அழைக்கிறது. நீங்கள் வளர்ந்து வரும் கவிஞராக இருந்தாலும் சரி அல்லது நாங்கள் தரும் சரண சந்தங்களால் ஆட்கொள்ளப்பட்டு வளரும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்கும் சொல் விற்பன்னராக இருந்தாலும் சரி, உங்கள் படைப்பாற்றலையும் மொழியின் மீதான ஆர்வத்தையும் பகிர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம்.

பாடல் மதிப்பீடு:

நீங்கள் சமர்ப்பிக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல் அறிந்தோரால் எங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு  ஆய்வுசெய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 

பரிசுகள் மற்றும் அங்கீகாரம்: 

போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அறிவிக்கப்படும் பரிசுகள் மற்றும் அவர்களின் பாராட்டப்படவேண்டிய திறமைக்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீடுகள் எங்கள் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் இடம்பெற்றுப் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும்.

எங்கள் அர்ப்பணிப்பு:

தமிழ் இலக்கியம்:

இந்த இணையத்தளத்தில், வளர்ந்துவரும் தமிழ்க் கவிஞர்களைக் கொண்டாடுவதில் எங்கள் முயற்சியை அர்ப்பணிக்கிறோம். தமிழ்ப் பாடல் எழுதும் கலைக்கு ஊக்கம் கொடுப்பதன் மூலம் எங்களால் முடிந்த தொண்டை தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றுவதாக நம்புகிறோம்.   

அனைவருக்குமான பன்முகத்தன்மை: 

நாங்கள் பாகுபாடின்றி எந்த பாரபட்சமும் பார்க்காமல் அனைத்து தரப்பிலிருந்தும்  பங்கேற்பாளர்களை வரவேற்கிறோம். வயது, பின்னணி அல்லது அனுபவ நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தமிழ்ப் பாடலின் துடிப்பான ஓசைகளில் பங்கேற்கவும் பங்களிக்கவும் அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விதிமுறைகள் மற்றும் ஒருமைப்பாடு:

நாங்கள் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் நடந்துகொள்ள எத்தனிக்கின்றோம். பங்கேற்பாளர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக போட்டி விதிமுறைகளை அறிவிப்பு செய்திருக்கின்றோம்.

வாருங்கள் ஈடுபடுங்கள்:

தமிழ் மொழியின் அழகைக் கொண்டாடவும், பாடல் வரிகள் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் எங்கள் இணையத்தளத்தில் பதிவுசெய்துகொள்ளுங்கள். நீங்கள் பாடலாசிரியராக இருந்தாலும் சரி, கவிஞராக இருந்தாலும் சரி, அல்லது தமிழ் இலக்கியத்தை விரும்புபவராக இருந்தாலும் சரி, ஒருசரணம்.காம்-யில் உங்களுக்கென்று ஒரு இடம் இருக்கிறது. எங்களின் வரவிருக்கும் நிகழ்வுகள், சமர்ப்பிப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நீங்கள் எவ்வாறு ஈடுபடலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய எங்கள் இணையதளத்தை ஆராயுங்கள்.