பாடல்/சந்தம்:
பல்லவி
அலைபாயுதே
- கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே
அனுபல்லவி
நிலைபெயராது
சிலைபோலவே நின்று, நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்அலைபாயுதே...
கண்ணா...
சரணம்
தெளிந்த
நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
மேலே
உள்ளது போல் இன்னும் ஒரு சரணம் எழுதுங்கள்
எங்கள் முயற்சி
பசுவும் பாலும் பரவிக் கிடக்கும் ஆயர் பாடியிலே
குழலை ஊதி என் மனதைப் பறித்த கார்முகிலே
வெண்ணெய் தேடி ஓடி ஆடும் சியாமளனே
தென்றல் போல் மறைந்து தழுவிடு காதலனே
நினைத்த மனத்தில் விரிந்து இனிக்கும் தேனமுதே
சிரிக்கும் ஒலியில் கிறங்க அடிக்கும் மாலவனே
வியக்கும் உருவம் கொண்ட எந்தன் முகிலவனே
மயக்கும் மந்திரம் முற்றும் அறிந்த மூலவனே