பாடல்/சந்தம்:
தனன தனநன்ன நன்னன்
தனன தனநன்ன நன்னன்
தனன நாநன்ன நானா
தனன நாநன்ன நானா
தனன நாநன்ன நானா
தானன நாநன்ன நானா
தனன தனநன்ன நன்னன்
தனன தனநன்ன நன்னன்
தனன நாநன்ன நானா
தனன நாநன்ன நானா
தனன நாநன்ன நானா
தானன நாநன்ன நானா
எங்கள் முயற்சி
உன்னை உறவென்ற உள்ளம்
என்னை வெட்கத்தில் தள்ளும்
விரக தாபமென்தன் வினா
உன்னை சேர்வதென்தன் கனா
அந்தி காண்பதொரு நிலா
அதன்பின் ஆரம்பம்நம் விழா
உன்னை உறவென்ற உள்ளம்
என்னை வெட்கத்தில் தள்ளும்
மண்ணும் நாற்றமும் நானே
மழையும் ஓர்ரசமும் நீயே
பெண்ணும் பேரழகும் நானே
அறிவும் ஆற்றலதும் நீயே
உன்னை உறவென்ற உள்ளம்
என்னை வெட்கத்தில் தள்ளும்
உள்ளம் கூடியபின் தானே
வசனம் பேசுவதும் வீணே
உந்தன் ஞாபகம்செந் தேனே
எண்ணம் ஆசையெலாம் நீனே
உன்னை உறவென்ற உள்ளம்
என்னை வெட்கத்தில் தள்ளும்
மையல் கொண்டநற் சீதை
சனகன் ஈன்றெடுத்த கோதை
கண்ணன் ராதையவள் போலே
ஒன்றும் நானில்லை பேதை