தமிழில் உள்ள உயிர் உயிர்மெய் மற்றும் மெய் எழுத்துக்கள் கொண்டு புனையப்படுவது தமிழ்க் கவிதைகள். தமிழ்க் கவிதைகள் சந்தக் கவிதைகளாக மாறும்பொழுது பாடல்கள் உருவாகின்றன. ஒரு கவிதை இலக்கணம், அதன் பொருள் மற்றும் வார்த்தை ஜாலம் மட்டுமே உடையதாக இல்லாமல் சந்தத்துடன் சேரும் பொழுது கவிதைகள் இனிமையடைகிறது மற்றும் இலகுவாகிறது. புது கவிதைக்கும் இது பொருந்தும். ஆகவே ஒருசரணம்.காம்(orusaranam.com) இணையத்தளத்தில் நடத்தப்படும் போட்டிகள் கொடுக்கப்பட்ட சந்தப் பாடலுக்கு இன்னும் ஒரு சரணம் எழுதும் போட்டிகளாகவும் மற்றும் கொடுக்கப்பட்ட சந்தத்திற்கு ஒரு பாடல் எழுதும் போட்டிகளாகவும் அமைந்துள்ளன. இதன் நோக்கம் இன்றைய ஊடகங்களுக்குத் தேவையான தமிழ் சந்தக் கவிதைகள் எழுதும் கவிஞர்களைக் கண்டறிந்து உலகுக்குப் பறைசாற்றுவதாகும்.

தமிழ் கவிதைகள், பாடல் வரிகள் மற்றும் கவிதை போட்டிக்கான தளம் - ஒரு சரணம் மேலும் பார்க்க

தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை
போட்டி
தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

சந்தப்பாடல் ( பெருமிதம்/ஆனந்தம்)

வகை:சந்தப்பாடல்


பரிசு வகை:பணம்

தகுதி பிரதேசம்:இந்தியா

தகுதி:அனைவருக்குமான போட்டி

எதிர்பார்க்கப்படும் கவிதைகள்:40

போட்டி முடியும் நாள்:2025-04-15

உதவி:

தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

3000

தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

1000

தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை
போட்டி
தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

வகை:சிறப்புப் பாடல்


பரிசு வகை:பணம்

தகுதி பிரதேசம்:இந்தியா

தகுதி:அனைவருக்குமான போட்டி

எதிர்பார்க்கப்படும் கவிதைகள்:47

போட்டி முடியும் நாள்:2025-05-15

உதவி:

தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

3000

தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

1000

ஒருசரணம்.காம்(orusaranam.com)ல் பரிசு பெறும் பாடல்கள் ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுச் சிறந்த கவிஞரின் சந்தக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்படும் தமிழ் எழுத்துக்களாலான தமிழ்க் கவிதைகள் சந்தம் மற்றும் ரசத்தின்(சந்தக் கவிதைகளாக இருந்தால்) வழி நிற்றல் அவசியம். அதோடு பொருள் பொதிந்தவையாகவும் வார்த்தை எளிமை மற்றும் ஈர்ப்புத் தன்மை கொண்டதாய் இருத்தல் நலம். யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு இருத்தல் மிகவும் சிறப்பு.

தமிழ்ப் பாடல் (Tamil Padal)  போட்டி வெற்றியாளர்கள்

சிப்பிக்குள் சென்று உறுத்தும் துகளது போல, சிந்தைக்குள் சென்று சேர்ந்த எண்ணம் ஒன்றை, கற்பனைப் புரவியேற்றி காதை தூரம் ஓட்டி, (செந்)தமிழ் பாடலை வார்ப்பிலிட்டு நற்சிலைதான் செய்து, குற்றமில் குமரியாய் இத் தளத்தில் இட்ட, எந் தலைக் கவிஞர்காள் போற்றி போற்றி !!

தமிழ்க் கவிதை | Tamil Kavithai

ஒரு சரணம்: தமிழ் கவிதைகளின் இணைய தளம்

தமிழ்க் கவிதைகள் (Tamil Kavithaigal) யாப்பிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டவை. யாப்பிலக்கணம் அசை, சீர், தளை, அடி, தொடை, ஆகிய பாடல் உறுப்புகள் பற்றி கூறுகின்றது.

எழுத்துக்களால் ஆனது அசை, அசைகளால் ஆனது சீர், சீர்களால் ஆனது அடி. 12 உயிரெழுத்துக்களும் 18 மெய்யெழுத்துக்களும் இவை ஒன்றுடன் ஒன்று சேர 216 உயிர் மெய் எழுத்துக்கள், அதோடு ஓர் ஆயுத எழுத்தும் ஆக மொத்தம் 247 எழுத்துக்களைக் கொண்டது தமிழ் மொழி.

குறில், நெடில், ஒற்று என்பதன் அடிப்படையில் அசை, நேரசை மற்றும் நிரையசையாக பகுக்கப்படுகிறது. ஓசை தழுவி வருவதே பாட்டு. அசைகள் இணைந்து உருவாக்கும் சீருக்கு வாய்பாடும், சீர்கள் புணர்வதற்கு தளை வகைகளும் கண்டனர் யாப்பிலக்கணத்தார்.

மேலும் படிக்க
தமிழ் கவிதைகள் பாடல் மற்றும் கவிஞர்கள் - ஒரு சரணம் முகப்பு பதாகை

தமிழ் இலக்கியத்தின் வளமான வரலாற்றில் தங்கள் படைப்புகளால் காலத்தை வென்று நிற்கும் பல சிறந்த கவிஞர்கள் இருந்துள்ளனர். இன்று நாம், ஔவையார், கம்பர், இளங்கோவடிகள், பாரதியார் போன்ற தமிழ் இலக்கிய பிரபல கவிஞர்களின் வரலாறு மற்றும் படைப்புகள் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம் செய்து கொள்வோம்.

எங்கள் பிரபல கவிஞர்களின் கதை மேலும் படிக்க

வெற்றியாளர்கள் கூற்று